கம்பஹா மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த ஆர்.ஷிராந்தி (வயது – 23) என்ற யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் சென்ற 26 வயதுடைய யுவதின் முன்னால் காதலன் அவரை சராமரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.