முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவரின் மரணம் தொடர்பில் மேலதிக உடற்கூறு பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ். போதன வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியால் இன்று மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு பரிசோதனையின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .
உடற்கூறு மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் சடலத்தை அடக்கம் செய்வதற்கும் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .இருப்பினும்அதனை இராணுவம் மறுத்துள்ளது.
இதேநேரம் சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் , அவர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் போதுகாயமடைந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.