-கிண்ணியா நிருபர்-
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றில் மாடு மேய்க்க சென்ற ஒருவரை முதலை கடித்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சிப்பித்திடல் தம்பலகாமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கே.சசிகுமார் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாடு மேய்க்க சென்ற இருவரில் ஒருவர் குறித்த ஆற்றில் காணாமல் போன நிலையில் ஊர்மக்கள் இணைந்து தேடியதில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.