-அலுவலக செய்தியாளர் சௌமினி சுதந்தராஜ்-
பெரியபோரதீவு கண்ணாக்குளம் பகுதிகளில் ராட்சச முதலைகள் நடமாட்டம் அதிகம் என்பதால் குறித்த பகுதிகளில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் இது வரையில் அதிகளவான கால்நடைகள் முதலைகளால் வேட்டையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.