முதலீடுகளை பெறுவதற்காக புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டவில்லை, என அமைச்சரவை பேச்சாளர்இ அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அப்படி தெரிவிப்பது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாமே ஒழிய, வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து இலங்கை அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய காலங்களில் குறித்த அமைப்புகளின் நடவடிக்கை தொடர்பாக தொடர்ச்சியான தீவிர கண்காணிப்பின் பின்னர், சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள கொள்கைகளுக்கு அமைய இத்தடை நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டின் 45 இலக்க ஐக்கிய நாடுகள் சட்டவிதிகளுக்கமைய, பாதுகாப்பு அமைச்சினால் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் அல்லாத அமைப்புகள் மீதான தடை அல்லது தடைநீக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கைமய, 6 புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.