நாராஹேன்பிட்டி பகுதியில் முட்டையை குறைந்த விலையில் பெற்றுத்தருவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முட்டைகள் அடங்கிய 10 பெட்டிகள் தம்வசம் காணப்படுவதாகவும் அதனை 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்து பணத்தை பெற்றுக்கொண்டு முட்டைகளை பெற்றுக்கொள்ள காத்திருக்குமாறு தெரிவித்து அங்கிருந்து தப்பிச் தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளார்.
தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நிதி மோசடி குற்றச்சாட்டில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.