கொழும்பு கஹதுடுவ பகுதியில் மின் சாதனம் மூலம் தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த தாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
பொல்கசோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த காஞ்சனா சுபாசினி லொகுஹேவகே (வயது – 30) என்ற மூன்று வயது பெண் பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டின் மேல் மாடியில் உள்ள குளியலறையில் குறித்த பெண் தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தேசிய பயிலுனர் தொழில்நுட்பப் பயிற்சி அதிகாரசபையில் முகாமைத்துவ உதவியாளராக சிறிது காலம் பணியாற்றிய இவர் குழந்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளதாகவுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.