-யாழ் நிருபர்-
யாழ். கோண்டாவிலில் உள்ள புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இன்றையதினம் செவ்வாய் கிழமை பிற்பகல் இரண்டரை மணியளவில் பிக்மீ சாரதி மற்றும் ஒரு முச்சக்கர வண்டி சாரதியினால் தாக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பகுதியில் இருந்த பயணிகள் இருவர் பிக்மீ மூலம் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியபோது குறித்த முச்சக்கர வண்டி சாரதி வாடிக்கையாளர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்டவேளை அவ்விடத்திற்கு வந்த மற்றொரு முச்சக்கர வண்டி சாரதி அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அத்துடன் பயணியையும் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்.