முச்சக்கரவண்டி விபத்து: இளைஞன் உயிரிழப்பு

காலி வீதியில் கொரலவெல்ல பிரதேசத்தில் நேற்று செவ்வாய் கிழமை முச்சக்கரவண்டி வீடொன்றிற்கு முன்னால் உள்ள சுவரொன்றில் மோதி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக கொரலவெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாகொடை, தியதஹேன பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற இளைஞன் படுகாயமடைந்துள்ள நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்