ஜா-எல – மினுவாங்கொடை பிரதான வீதியில் முச்சக்கரவண்டியில் பந்தயம் நடத்திய 5 பேரும், போட்டியைப் பார்த்த 10 இளைஞர்களும் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏக்கல, சிதுவ, கந்தான மற்றும் ஜா-எல பிரதேசங்களில் வசிக்கும் 20-30 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீதியில் இதற்கு முன்னரும் பல ஆபத்தான சூதாட்ட பந்தயப் போட்டிகள் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.