நுவரெலியா-கந்தப்பளை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை திருடி சென்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த 18 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தப்பளை தேயிலை தோட்டத்தை சேர்ந்த நபர் தனக்கு சொந்தமான முச்சக்கர வண்டியை கந்தப்பளை நகரில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சந்தேக நபர் முச்சக்கர வண்டியை திருடி சென்றுள்ளார்.
முச்சக்கர வண்டி திருட்டு தொடர்பில் கந்தப்பளை பொலிஸாரிடம் முறையிட்டதை தொடர்ந்து பொலிஸார் திருடி செல்லப்பட்ட முச்சக்கர வண்டியை பொரலந்தை நகரில் மடக்கி பிடித்ததுடன் முச்சக்கர வண்டியை திருடி சென்ற இளைஞரையும் கைது செய்ததாக சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வரும் கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞரை விசாரணையின் பின்னர் நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.