-கிண்ணியா நிருபர்-
கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி பிரிவின் புதிய பணிப்பாளராக என்.எம்.நௌபீஸ் திருகோணமலையில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கடமையினை பொறுப்பேற்றார்.
குறித்த நியமனக் கடிதத்தை மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க 12 ஆம் திகதி அன்று திருகோணமலையில் உள்ள மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்திருந்தார். கிழக்கு மாகாண ஆளுனரினால் குறித்த பதவிக்கான நியமனம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை நிருவாக சேவை அதிகாரியான இவர் முன்னால் மாகாண விளையாட்டு பணிப்பாளர், கிண்ணியா ஏறாவூர் நகர சபைகளின் செயலாளராகவும், சிறுகைத்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர், மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகிய பதவிகளில் முன்னர் திறம்பட கடமையாற்றியுள்ளதுடன் பொதுத் துறை நிருவாகத்தில் முதுமாணிப்பட்டம் பெற்றுள்ளதுடன் சட்ட இளமாணி கற்கையினையும் பூர்த்தி செய்துள்ளார்.
இந்த கடமை பொறுப்பேற்பு நிகழ்வில் பல அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.