கிளிநொச்சி முகமாலை பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இரவு வீடு ஒன்று இனம் தெரியாத விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவதுஇ
கடந்த 45 நாட்களுக்கு முன்னர் வன்முறை சம்பவம் ஒன்று இடம் பெற்றிருந்ததாகவும் அதில் ஒருவர் மரணம் அடைந்திருந்ததாகவும்இ அவரது 45 ஆம் நாள் நினைவு நேற்றையதினம் இடம் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த வன்முறைச்ச சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரது வீடு மீதே நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இதே வேளை கடந்த 45 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

