இலங்கையில், பெண்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பதாக இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவன அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும் இது தொடர்பில் கடந்த வாரம் நுகர்வோர் அதிகாரசபையின் விசேட அதிரடி சோதனைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரின் விபரங்கள் இன்றி சட்டவிரோத லோஷன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றில் 7 வகையான உடல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் 6 வகையான பாதரசத்தின் அளவு ஒரு கிலோவிற்கு 8.1 மில்லிகிராமிலிருந்து 31.540 மில்லிகிராம் வரை மிக அதிகமாக இருந்ததாக இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்வுக்கூடம் அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி ஈ. யு. ரஞ்சனா தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்