நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் இவ்வாறு மீலாதுன் நபி தினமாக நினைவு கூறப்படுகிறது.
மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள செய்தியில்,
உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் மார்க்கப் போதகராக விளங்கிய நபிகள் நாயகத்தின் உபதேசங்கள், முன்பை விட இன்றைய சமூகத்தில் நிலவும் சூழ்நிலையைப் போக்க உதவும் என தாம் நம்புவதாகவும் அன்றைய சமூகத்தில் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதில் நபிகளார் முகங்கொடுத்த கடினமான அனுபவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
அப்படிப்பட்ட தருணத்திலும் பொறுமையும் மௌனமும் தான் அவரின் கூரிய ஆயுதங்களாக இருந்தன.
பரஸ்பர புரிதல், சகோதரத்துவம், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல், நேர்மை என அவர் வாழ்நாள் முழுவதும் காத்து வந்த பண்புகள், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் நமது நம் வாழ்வில் இலட்சியமாகக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமாதானம், அமைதி என்பவற்றை தோற்றுவிப்பதற்காக பாடுப்பட்ட நபிகள் நாயகத்தின் வழியை அனைவவரும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.