மீரிகம வில்வத்த ரயில் மார்க்கத்தில் ரயிலுடன் கொள்கலன் பாரவூர்தி ஒன்று மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில், ஆராய்வதற்காக 4 பேர் கொண்ட விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் அறிக்கையின் பின்னர், விபத்துக்கான காரணம் தொடர்பில், வெளிப்படுத்தவுள்ளதாக ரயில் திணைக்களத்தின் உதவி பொதுமுகாமையாளர் என்.ஜே இதிபொலகே தெரிவித்துள்ளார்.
வில்வத்த ரயில் கடவையில் பொல்ஹாவெலவில் இருந்து ரத்மலானை நோக்கி பயணித்த அலுவலக தொடருந்துடன், கொள்கலன் பாரவூர்தியொன்று மோதி நேற்று புதன்கிழமை விபத்துக்குள்ளான போது கொள்கலன் பாரவூர்தியின் சாரதி அதிலிருந்து இறங்கியமையினால் உயிர் தப்பினார்.
விபத்தின் பின்னர் அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமும் அங்கிருந்த ஏனைய சிலரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.