தம்புள்ளையில் கடற்படை வீரர் ஒருவர் மீன் ஒன்றின் விஷ முள் குத்தியதில் உயிரிழந்துள்ளதார்.
மீகஸ்வெவ, போபீயாவெவ கிராமத்தை சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த கடற்படை வீரர் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளதுடன், நண்பர் ஒருவருடன் எழபட்டுவெவ என்ற குளத்தில் நீராடச் சென்ற போது குளத்தில் இருந்த விஷ முள்ளுடன் கூடிய விரால் மீனை மிதித்துள்ளார்.
மீனின் முள் குத்தியதால் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக அவர் அம்பியூலன்ஸ் வண்டியின் மூலம் மெதிரிகிரிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் கடற்படை வீரரின் உடல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைகளுக்காக பொலன்னநறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.