காலி மாத்தறை பிரதான வீதியில் வெலிகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள மீன் சந்தையொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 40 வயதுடைய மீன் வியாபாரி மற்றும் 52 வயதுடைய உதவியாளர் ஒருவர் ஆகிய இருவருமே காயமடைந்து வெலிகம வலான பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.