நாட்டில் மீன்களின் மொத்த விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.
மீன் கொள்வனவுக்கான கேள்வி குறைந்துள்ளமை இதற்குக் காரணம் என சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. எனினும் தற்போது மீன்களின் மொத்த விலை 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.