2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய பாட முதலாம் மற்றும் இரண்டாம் வினாத்தாள்கள் முன்னரே வெளியான சர்ச்சையால் மீண்டும் பெப்ரவரி 1 ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பெப்ரவரி 1 ஆம் திகதி காலை 8.30 முதல் முற்பகல் 11.40 வரையில் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சையும் பிற்பகல் 1 மணிமுதல் 3 மணிவரையில் முதலாம் வினாத்தாளுக்கான பரீட்சையும் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.