மீண்டும் தேசிய அணியில் இணைவதே தமது நோக்கம் என கிரிக்கெட் விளையாட்டு வீரர் தனிஷ்க குணதிலக்க தெரிவித்துள்ளார்.
2022 ஆம் வருடத்தில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் போது, பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தற்போது, குற்றமற்றமற்றவராக கருதி விடுவிக்கப்பட்டு ஒரு வருடமும் 2 மாதங்களும் கடந்துள்ள நிலையில் அவர் நேற்றைய தினம் சனிக்கிழமை மீண்டும் உள்ளுர் போட்டிகளில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எஸ்.எஸ்.சி விளையாட்டு கழகம் அவருக்கு விதிக்கப்பட்ட உள்நாட்டு கிரிக்கெட் தடையை நீக்கியதன் மூலம். நேற்று இந்த ஆண்டு கழகங்களுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நுகேகொடை விளையாட்டுக் கழகத்துடன் எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் மீண்டும் விளையாடி இருந்தார்.