நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மேல் மாகாணத்தில் 12, 847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை இந்த மாதத்தில் மாத்திரம் 40,000ற்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 32,301 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்