மிஸ் நெதர்லாந்து கிரீடத்தை வென்ற திருநங்கை
இந்த ஆண்டு திருநங்கை மாடல் அழகி நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
டச்சு மாடல் ரிக்கி வலேரி கோல் (வயது – 22) இந்த ஆண்டு மிஸ் நெதர்லாந்து கிரீடத்தை வென்றது முழு உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
அதன்படி இந்த ஆண்டு உலக அழகி போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற இவர் நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையை ரிக்கி பெற்றுள்ளார்.
அதன்படி, அவர் உலக அழகி பட்டத்தை வென்றால், பட்டத்தை கைப்பற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெறுவார். மிஸ் நெதர்லாந்து ஆன பிறகு பேசிய ரிக்கி, மிஸ் வேர்ல்ட் போட்டியில் சேர ஆவலுடன் இருப்பதாக கூறினார்.
வெற்றிக்குப் பிறகு, தனக்கு நல்ல மற்றும் கெட்ட பதில்கள் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், திருநங்கை என்ற முறையில் பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்