பிட்டமாறுவ பகுதியில் மிளகு தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது மடூல்சீமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிட்டமாறுவ இடிகம்பளை பகுதியில் மிளகு பயிரிடப்பட்டிருந்த கொடிகளுக்கு இடையே கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சூட்சுமமான முறையில் மிளகு கொடிகளுக்கு இடையே வளர்க்கப்பட்ட 19 கஞ்சா செடிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இடிகம்பளை பிட்டமாறுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நாளை திங்கட்கிழமை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.