-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி மிரிஸ்வெவ பகுதியால் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று தீப்பற்றிள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை கணவன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் உறவினர்களின் வீட்டுக்கு வவுனியா சென்று கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதில் திருகோணமலை அன்புவெளிபுரம்- அண்ணா வீதியில் வசித்து வரும் கிரீஸ்கந்ததேவன் சஞ்சீவதரன் (32 வயது) என்பவருடைய மோட்டார் சைக்கிளே தீப்பற்றியதாகவும் தெரிய வருகின்றது.
எனினும், குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தம் தொடர்பில் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள் தீ பற்றுவதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

