நாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வெட் வரியை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் வெட் வரி அதிகரிக்கப்படுகின்ற போதிலும், அது தற்காலிகமாகவே அமுலில் இருக்கும் என்பதால் மின் கட்டணம் உள்ளிட்ட பல துறைகளில் தாக்கம் செலுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.