ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களை தவிர வேறு எந்த மாதத்திலும் மின் கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் எதிர்காலத்தில் மின்வெட்டு திட்டமிடப்பட மாட்டாது என்றும் மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர அவரது டுவிட்டர் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
திட்டமிடப்பட்ட மின்வெட்டு இன்றி ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளதாகவும் தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் முழு கொள்ளளவும் மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
