புத்தளம் ஆனமடுவ செம்புவெவ பகுதியில் தும்பிக்கை மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று சனிக்கிழமை வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கொம்பன் யானை 9 அடி உயரமும் அதன் தந்தம் 2 அரை அடி நீளம் எனவும் 40 வயது மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த கொம்பன் யானைக்கு மிருக வைத்தியர் இசுருவினால் நாளை ஞாயிற்றுக்கிழமை உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.
இந்த யானை மரணித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
