முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில் நேற்று செவ்வாய் கிழமை இரவு வயல் நிலத்துக்காக பாதுகாப்புக்கு போடப்பட்ட மின்சார வேலி ஒன்றில் சிக்குண்டு கொம்பன் யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
15 வயது மதிக்கத்தக்க யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
யானையின் உயிரிழப்பு தொடர்பில் உள்ள தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளதுடன் பொலிஸாரும் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு உள்ளார்கள்.
மின்சார வேலையினை இணைப்புச் செய்த காணியின் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.
