பாராளுமன்றத்தில் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது .
இதேநேரம் கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று இந்த கூட்டம் நடைபெற்றது.