மின்சார சபையின் சேவைகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.
மின்சார சபையின் ஊழியர்களை பணி இடைநிறுத்தம் செய்யுமாறும், மின்சார சபையின் சேவைகளை சீர்குலைக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தியுள்ளார்.