-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார கட்டண அதிகரிப்பு காரணமாக அமைதி வழி தீப்பந்த போராட்டம் இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு அங்கிருந்து மருதடி வீதியூடாக வந்து, பொஸ்கோ வீதியுடாக வந்து, அங்கிருந்து இளம் கதிர் சனசமூக விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.
யாழ்ப்பாண மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம அமைப்பாளர் வெற்றிவேல் கஜேந்தன், உதவி அமைப்பாளர் சுப்பிரமணியம் சிறிக்காந்தராசா ஆகியோர்களின் இணைத்தலைமையில் இத் தீப்பந்த போராட்டம் இடம்பெற்றது. இதில் உள்ளூர் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.