திருகோணமலை தோப்பூர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்தசம்பவத்தில் தோப்பூர் அல்லைநகர் 06ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிலுர்தீன் அம்ஹர் (வயது-16) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் மின் குமிழ் ஒன்றினை திருத்திக் கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கியதாகவும் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் தரம் 11இல் கல்வி கற்று வந்தவர் எனவும் தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.