அநுராதபுரம் – மதவாச்சி பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
25 வயதுடைய காட்டு யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக வயலில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கியே இந்த காட்டு யானை உயிரிழந்துள்ளதுடன் இந்த மரணம் தொடர்பில் சந்தேகிக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வயலின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
யானையின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.