மாத்தளை ரத்தோட்ட கிராம பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்மதுவ களுகல்தன்ன பிரதேசத்தில் வசிக்கும் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் அகலங்க் இந்துவர (வயது – 16) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த மாணவன் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்க முற்பட்ட போது மற்றுமொரு மாணவனால் மரத்தில் இருந்தவருக்கு கொடுக்கப்பட்ட மூங்கில் மரம் மின்சார கம்பியில் மோதி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.