புத்தளம் பகுதியில் மதுரங்குளி, முக்குதொடுவா பிரதேசத்தில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவரை மணல் வர்த்தகர் உட்பட சிலர் கொடூரமாக தாக்கியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான புத்தளம் மின்சார சபை அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் இருவர் மின் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முக்குதொடுவா பகுதியில் உள்ள மணல் வியாபாரியின் வியாபார ஸ்தலத்தில் கடந்த ஒரு மாதமாக மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரத்தை துண்டித்து விட்டு அங்கிருந்து வெளியேறிய போதே தாக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரம் துண்டிப்பதற்கு முன்னர் அங்கிருந்த பெண்ணொருவருக்கு அறிவித்துவிட்டு மின்சாரத்தை துண்டித்ததாகவும் கட்டணத்தை செலுத்தியவுடன் மீண்டும் மின்சாரம் வழங்குவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.