பதுளை ரஜவத்த வீதியால் பயணித்த டிப்பர் வாகனம் கண்டி பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மட்பாண்ட விற்பனை நிலையத்தின் அருகில் இருந்த மின்சாரத்தூணுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.