மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.
இதேவேளை அறுபது ஆண்டுகளாக தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த மாவை சேனாதிராஜா உடல் நல குறைவு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தனது 82ஆவது வயதில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்