மொனராகலை மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
பகினிகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த மதுசங்க சமிந்த குமார (வயது – 36) என்ற நபரே இவ்விபத்தில் உயிரிழந்தார்.
மெதகம மொனராகலை வீதியில் பேருந்தும், முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியே இந்த விபத்து இடம் பெற்றது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில், மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஆபத்தான நிலையிலிருந்த ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் தனது மனைவியின் தாயாரின் இறுதிக் கிரியைக்காக அப்பகுதிக்கு வந்துள்ளதாகவும், இறுதிச் சடங்கிற்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை எடுத்து வருவதற்காக மெதகம நகருக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.