-திருகோணமலை நிருபர்-
திருகோணமலையில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாமல்வத்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியின் 47 வயதுடைய மாமாவே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.