மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
பிரதேசசபையின் நிதியில் இடம்பெறவுள்ள வீதிப் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை வட்டார மக்கள் பிரதிநிதி கலொக் கணநாதன் உஷாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


