மானிப்பாய் மேற்கு கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் நிர்வாகத்தினரதும், மக்களினதும் வேண்டுகோளுக்கிணங்க நீர்த்தாங்கியுடன் கூடிய குடிநீர் இணைப்பை தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் உறுப்பினர்கள் இரண்டு நாட்களில் அமைத்தனர்.
இவ்வாறு அமைக்கப்பெற்ற நீர்த்தாங்கியுடன் கூடிய நீர்க்குழாயினை திறந்து வைக்கும் வைபவம் இன்று இடம்பெற்றது.
இந்த வைபவத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான க.இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் அமைப்பாளர் தே. தஜீவன், பிரதேசசபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், கிராமிய சங்கத்தின் நிர்வாகத்தினர்கள், இளைஞர்களும் மற்றும் மக்கள் கலந்துகொண்டனர்.
இவ் நீர்த்தாங்கியுடன் கூடிய குடிநீர்க்குழாய் இணைப்பானது பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனின் நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்டது.

