பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாதுவ, மாவல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய மருந்தகம் ஒன்றில் உதவியாளராக கடமையாற்றும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், போதைப்பொருள் விற்பனை செய்வதாக, பிரதான பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலக்கவுக்கு கிடைத்த தகவலின் பேரில், குறித்த மருந்தகத்தை சோதனையிட்ட பொலிஸார், 2500 மாத்திரைகள் அடங்கிய 250 அட்டைகளுடன் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.