பேருவளையைச் சேர்ந்த ஆசிரியை மர்ஹுமா ஸீனத் நயிமா அமீன்னின் ஞாபகார்த்தமாக அவரின் புதல்வர் எம்.பிராஸினால் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்திற்கு 5 கணனிகள் இன்று வியாழக்கிழமை அன்பளிப்புச் செய்யப்பட்டன.
லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் தகவல் தொழிநுட்ப பாடத்தினை கற்றுக்கொள்வதற்கு கணனிகள் இல்லாத குறை நீண்டகாலமாக இருந்து வந்தது. அதனை அடுத்து அதிபர் எம்.ஐ.எம். சம்சுதீன் சாய்ந்தமருது பிரதேசத்தின் கணனி விற்பனை முஹம்மட் முபீனிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அவரின் பூரண சிபாரிசின் அடிப்படையில் மேற்படி கணனிகள் குறித்த பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றது.
இக்கணனிகளை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எம். சுஜான் உட்பட பாடசாலையின் முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதனைப் பெற்றுத்தர முழுப்பங்களிப்பு வழங்கிய சகோதரர் முஹம்மட் முபீனுக்கும் இதனைத் தந்துதவிய சகோதரர் பிராஸ்கும் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை சமூகம் தெரிவித்தனர்.



