இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பாடசாலை மாணவர்கள், இந்த மாதம் முழுவதும் தமது நவம்பர் மாதத்திற்கான பருவச்சீட்டுக்களைப் பயன்படுத்தி பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, கடந்த மாதத்திற்கான பருவச்சீட்டுக்களைப் சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெற முடியும் என்று கூறினார்.
இதற்கிடையில், தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை மீண்டும் நிலைநாட்ட நிதி திரட்டும் நோக்குடன், ஆசிரியர்கள் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.