வவுனியா – மன்னார் வீதியில் வீதியில் பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வவுனியா பகுதியை சேர்ந்த வி.ஜெயந்தினி (வயது – 45) என்பவர் பலியாகியுள்ளதுடன், அவரின் மகன் விஜயரட்னம் சிவரோஜன் (வயது – 22) காயமடைந்துள்ளார்.
வவுனியா, குருக்கள்புதுக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா, பூவரசங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.