-பதுளை நிருபர்-
ஹப்புத்தளை பெரகல பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவர்களை வீதியில் சென்ற மாடுகள் முட்டியதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர்கள் ஹல்துமுல்ல ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
பெரகல பத்கொட விபுலானந்த வித்தியாலயத்தில் 6ஆம் மற்றும் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 5 மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.