நாகொல்லாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வல்பாலுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாகொல்லாகம, வல்பாலுவ பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 22 ஆம் திகதி மாலை மாடுகளை மேய்ப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட நிலையில் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடும் போது மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாகொல்லாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.