மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதற்கான உத்தரவு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்