மட்டக்களப்பு கருவேப்பங்கேனி பகுதியில் இருக்கும் பிரதான வாய்கால் பகுதியில் உக்ககூடிய மற்றும் உக்க முடியாத குப்பைகள் அடைபட்டு நீர் வெளியேறுவதில் சிரமம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கால்வாய் பகுதியில் குப்பைகள் மட்டுமல்லாது புற்களும் வளர்ந்துள்ளதுடன் அவற்றில் நுளம்பு குடம்பிகளும் அதிகளவில் காணப்படுகின்றன. இவ்வாறு நீர் தொடர்ச்சியாக தேங்கி நிற்பதால் மாலைவேளைகளில் குறித்த பகுதிகளில் நுளம்பு தொல்லை காணப்படவதாகவும் இதனால் டெங்கு மலேரியா போன்ற நோய் பரவல் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் தொடர்ச்சியாக மழை நீர் தேங்கியுள்ளதால் தங்களுடைய குடி நீரும் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தகுந்த தீர்வினை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

